17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
சதானந்த கவுடா மத்திய அமைச்சராக பதவியேற்பு! - மத்திய அமைச்சர்
டெல்லி: கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா மத்திய அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டார்.

சதானந்தகவுடா
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்,மாநிலங்களவை உறுப்பினரான சதானந்த கவுடா மத்திய அமைச்சராக பதவியேற்றார். இவர், கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.