தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜன., 27 காலையில் விடுதலையாகிறார் சசிகலா. - வி.கே. சசிகலா

விக்டோரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே. சசிகலா நான்காண்டுகள் சிறை தண்டனை முடிந்து நாளை(ஜன.27) காலையில் சிறையிலிருந்து விடுதலைாயாகிறார்.

விடுதலையாகிறார் சசிகலா.
விடுதலையாகிறார் சசிகலா.

By

Published : Jan 27, 2021, 12:15 AM IST

பெங்களூரு: ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்றுவந்த, ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவிலிருந்து வெளியேற்றபப்பட்டவருமான வி.கே. சசிகலா தனது நான்காண்டு தண்டனை முடிந்து நாளை காலையில் விடுதலை செய்யப்படுகிறார்.

இதுகுறித்து சிறைத்துறை அலுவலர்கள் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நாளை முறையாக விடுதலை செய்யப்படுகிறார். அதற்கான சம்பிரதாயங்கள் நாளை அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் வைத்து முடிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 20 ஆம் தேதி உடல்நலம் பாதிப்பட்டு போரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, விக்டோரிய மருத்துவமனையின் கோவிட்- 19 பிரிவிற்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையிலிருந்து அவர் எப்போது வீடு திரும்புவார் எனத் தெரியவில்லை.

சசிகலாவின் உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தப் பின்னர், அவர் வீடு திரும்புவது முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சசிகலா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் அறிக்கையில், அவர் நலமாக உள்ளார். தற்போது அவருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டிருந்தது.

விக்டோரியா மருத்துவமனை அலுவலர்கள் கூறுகையில், கரோனா சிகிச்சை நடைமுறைப்படி 10 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். இருந்தும் சசிகலா குடும்பத்தினர் அவருக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தர விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார் என்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மைத்துனி ஜெ. இளவரசி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன், வி.என். சுதாகரன் ஆகியோருடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலாவைப் போலவே அறிகுறியற்ற கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இளவரசி, பிப்ரவரி முதல்வாரத்தில் விடுதலை செய்யப்படுகிறார்.

இதையும் படிங்க:ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா; தேசிய தலைவர்கள் பங்கேற்காததால் அதிமுகவினர் வருத்தம்!

ABOUT THE AUTHOR

...view details