சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கணவர் நடராஜன் மரணம் தொடர்பாக பரோலில் வந்தார். சிறை விதிகளை மீறி ஷாப்பிங் சென்றது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான காணொலிகளு சமூக வலைதளங்களில் வெளிவந்தன.
கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து கண்டுபிடித்து குற்றஞ்சாட்டினார். அண்மையில், சசிகலாவின் நன்னடத்தை காரணமாக சிறை தண்டனை முடியும் முன்னரே விடுதலையாவார் எனச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், ஆர்டிஐ மூலம் சசிகலா விடுதலை தேதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த கர்நாடக சிறை நிர்வாகம், வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. விதிக்கப்பட்ட அபாரதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாவிட்டால் விடுதலையாவதில் காலதாமதம் ஆகலாம். இதனால், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுதலையாகலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில் சசிகலா, "எனது விடுதலை, தண்டனை விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைக் கேட்டு பல்வேறு விண்ணப்பங்கள் வந்திருப்பதாக அறிகிறேன்.