சிகிச்சைப் பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் அவர் உறுதுணையுடன் எழுந்து நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் அவரது உடல் நிலை சீராகவுள்ளது, உணவுகளை முறையாக எடுத்துக்கொள்கிறார் எனவும் கூறியுள்ளது.
எழுந்து நடக்கிறார் சசிகலா; சீராகும் உடல்நிலை - Sasikala release date

சசிகலா
10:24 January 24
கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'ஆறு விரல் விநோதம்' தனி அடையாளத்தை கொண்ட ஹரியானா குடும்பம்!
Last Updated : Jan 24, 2021, 11:31 AM IST