படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை! - sarthai vallapai patel
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலைக்கு பிரதமர் மோடி, அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி அரசியல் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த மோடி அங்கிருந்து வதோதரா அருகே அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை இருக்கும் இடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியும் சென்றார். இதைத் தொடர்ந்து மோடி அவரது தாயிடம் ஆசிர்வாதம் பெறவுள்ளார்.