தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நர்மதா அணையின் நீர்மட்டம் 136.17 மீட்டராக உயர்வு! - நர்மதா அணையின் நீர்மட்டம் 136.17மீ உயர்வு

குஜராத்: நர்மதா அணையின் நீர்மட்டம் 136.17 மீட்டராக உயர்ந்துள்ளதையடுத்து, இம்மாத இறுதிக்குள் அந்த அணையின் முழுகொள்ளளவான 138.68 மீட்டர் உயரத்தைத் தொடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்மதா அணை

By

Published : Sep 8, 2019, 11:22 PM IST

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டம் 136.17 மீட்டராக உயர்ந்துள்ளது. இதனால் அந்த அணையின் முழு கொள்ளளவான 138.68 அடி உயரத்தை இம்மாத இறுதிக்குள் எட்டும் என அலுவலர்கள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை அதிகமாகப் பெய்து வரும் நிலையில், வட மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குஜராத்தின் நர்மதா அணையின் உயரம் 2017ஆம் ஆண்டு 138 அடியாக உயர்த்தப்பட்டதையடுத்து, முதன்முறையாக முழு கொள்ளளவை அந்த அணை எட்டவுள்ளது. இதனிடையே நர்மதா அணையின் 12 வாயில்களும் திறந்துவிடப்பட்டுள்ளன.

நர்மதா அணையின் நீர்மட்டம் 136.17மீ உயர்வு

இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details