தமிழ்நாடு

tamil nadu

சர்தார் படேல் மருத்துவமனையிலிருந்து குணமடைந்த 161 கரோனா பாதித்தவர்கள்!

By

Published : Aug 18, 2020, 5:28 PM IST

டெல்லி: உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையான சர்தார் படேல் மருத்துவமனையிலிருந்து நேற்று 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

sardar-patel-covid-hospital-discharges-161-patients
sardar-patel-covid-hospital-discharges-161-patients

டெல்லியில் உள்ள உலகில் மிகப்பெரிய கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான சர்தார் படேல் கரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நேற்று (ஆகஸ்ட் 17) ஏராளமான கரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

தொற்றிலிருந்து குணமடைந்த 161 பேரில் 39 பெண்களும் அடங்குவர். குணமடைந்தவர்களுக்கு இந்தோ-திபெத்தியன் எல்லை கூடுதல் காவல் இயக்குநர் அமிர்த் மோகன் குணமடைந்ததற்கான சான்றிதழ்களையும், ரோஜா பூவையும் வழங்கி வாழ்த்தினார்.

உலகின் மிகப்பெரிய கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையான சர்தார் படேல் மையம் கடந்த ஜூலை 5ஆம் தேதிமுதல் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவலர்கள் நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த மையம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சையளிக்கக்கூடியது.

தற்போது வரை, இந்த மையத்தில் மொத்தம் ஆயிரத்து 515 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து மொத்தம் ஆயிரத்து 127 பேர் இந்த மையத்தில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் கரோனா தீநுண்மியின் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details