தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாரதா நிதி நிறுவன வழக்கு: முன்பிணை கோரும் முன்னாள் ஆணையர்! - rajeev kumar ips

கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்பிணை கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் குமார்

By

Published : Sep 25, 2019, 9:06 AM IST

முதலீட்டாளர்களிடமிருந்து கோடி கணக்கில் பணம் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக சாரதா நிறுவனம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை உலுக்கிய இந்த மோசடி வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில சிஐடி காவல் பிரிவு கூடுதல் இயக்குநராக உள்ள ராஜிவ் குமார் என்பவர், இந்த வழக்கில் சிபிஐ தன்னை சிக்கவைக்க முயற்சிப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வெளிச்சத்திற்கு வந்தபோது கொல்கத்தா நகர காவல் ஆணையராக ராஜிவ் குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜிவ் குமாரின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க:சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கு - முன்னாள் காவல் ஆணையர் இன்று ஆஜராக அழைப்பாணை!

ABOUT THE AUTHOR

...view details