சாரதா நிதிமோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா முன்னாள் காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது சிபிஐ-யின் மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சாரதா நிதிமோசடி வழக்கு: ராஜீவ்குமாரின் கைது தடையை நீடிக்க மறுப்பு! - கொல்கத்தா
கொல்கத்தா: சாரதா நிதி மோசடி வழக்கில் தன்னைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கக்கோரி முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ராஜீவ் குமாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம், கடந்த 17ஆம் தேதி, திரும்பப்பெற்றது. இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றத்தை அணுகிய ராஜீவ் குமார், கைது நடவடிக்கைக்கு ஏழு நாள் தடை உத்தரவு பெற்றிந்தார்.
இந்த உத்தரவானது இன்றுடன் முடிவடைந்த நிலையில், கைது தடையை நீட்டிக்கக்கோரி ராஜீவ் குமார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது தடைக்காலத்தை நீடிக்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.