மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவித்ரி புலே புனே பல்கலைக்கழகம் அதிகளவில் மரக்கன்றுகளை விநியோகம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க நினைத்தது. இந்நிலையில், நேற்று (ஜூன் 23) பலக்லைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், புனே பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திரகண்ட் பட்டில் கலந்துகொண்டார்.
இதில் மாணவர்கள் மூன்று வண்ணங்களில் உடையும், தொப்பியும் அணிந்து வந்திருந்தனர். அதை பார்ப்பதற்கு தேசியக் கொடியை போன்றே இருந்தது. இதில் 20,000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது.