தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி விவசாயிகளை சந்திக்க சஞ்சய் ராவத் திட்டம்! - உத்தவ் தாக்கரே

டெல்லி காசிப்பூர் பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சந்திக்க போவதாக சஞ்சய் ராவத் எம்பி தெரிவித்துள்ளார்.

Sanjay Raut to meet protesting farmers Sanjay Raut Delhi visit Delhi borders farmers protest Ghazipur border news Rakesh Tikait சஞ்சய் ராவத் சிவசேனா உத்தவ் தாக்கரே விவசாயிகள் போராட்டம்
Sanjay Raut to meet protesting farmers Sanjay Raut Delhi visit Delhi borders farmers protest Ghazipur border news Rakesh Tikait சஞ்சய் ராவத் சிவசேனா உத்தவ் தாக்கரே விவசாயிகள் போராட்டம்

By

Published : Feb 2, 2021, 6:16 PM IST

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தலின்பேரில், டெல்லி காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேச உள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் அறிவுறுத்தலின் படி டெல்லிக்கு அருகிலுள்ள காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்திக்கப் போவதாக சஞ்சய் ராவத் எம்பி செவ்வாய்க்கிழமை (பிப்.2) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் மேலும் கூறுகையில், “மகா விகாஷ் அகாதி கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டுவருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நிற்பார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு சிவசேனாவின் ஆதரவு உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஜன.26ஆம் தேதி நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'விரைவில் கொல்கத்தா வந்தடைவோம்'- ஆர்ப்பரிக்கும் சிவசேனா!

ABOUT THE AUTHOR

...view details