மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் பதவி குறித்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இதனால், பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தர மறுத்தது. இருந்தபோதிலும், அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்தது.
கூட்டணியில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகவே காரணம் - சிவசேனா குற்றச்சாட்டு - பாஜக, சிவசேனா
மும்பை: கூட்டணியில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகவே காரணம் என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பிட்ட கால அளவுக்குள் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்துவருகிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், "சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. சிவசேனாவைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை ஏற்பாட்டில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? கட்சியை நிறுவிய அத்வானி செயலற்று உள்ளார். கூட்டணியில் நிகழும் குழப்பங்களுக்கு பாஜகவே காரணம்" என்றார்.