இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 'காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆட்சியமைக்கும் அரசின் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று கட்சிகளும் கூட்டாக முடிவு செய்யும். நேற்றுவரை, காங்கிரஸ்-என்சிபியின் மராத்தான் கூட்டங்கள் என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்றது.
அடுத்த இரண்டு நாட்களில் புதிய அரசை நிறுவுவதை நோக்கி முன்னேறுவோம். முதலமைச்சர் சிவசேனாவைச் சேர்ந்தவராக இருப்பார். உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றது.