மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்கப்பதிவு, 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
தங்கைக்காக தேர்தல் பரப்புரை செய்த பாலிவுட் பிரபலம் - lok sabha 2019
மும்பை: மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிடும், தனது தங்கை பிரியா தத்திற்காக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மும்பையின் பந்த்ரா பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
இந்தத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வடக்கு மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியா தத் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்தின் தங்கை ஆவார். இந்நிலையில், வடக்கு மும்பை பகுதியான பந்த்ரா பகுதியில் தனது தங்கைக்கு ஆதரவாக சஞ்சய் தத் பரப்புரை மேற்கொண்டார்.
சஞ்சய் தத் இந்த பரப்புரையை திறந்தவெளி வாகனத்தில் செய்தார். அப்போது அவர் அந்தத் தொகுதிக்காக தனது தந்தை செய்த நல்ல காரியங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். மேலும், அவரின் தங்கை வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.