விஷவாயு தாக்கி இறக்கும் செயல்கள், தொடர்கதைகள் ஆகி வருகின்றன. மற்ற விபத்துகளைவிட மிகவும் கொடுமையான, இந்த விபத்து மறுபடியும் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கரின் முங்கேலியில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய, துப்புரவுத் தொழிலாளி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முயற்சித்துள்ளனர். கௌஷிக் என்பவர் கழிவுநீர்த் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது, மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் விழுவதைக் கண்ட மற்றொரு குடும்ப உறுப்பினர், உடனே தொட்டிக்குள் குதித்து, அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.