கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போதை பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கிடைத்த தகவலின்படி படி, காவல் துறையினரும், சிசிபியும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அதன்படி, பெங்களூருவில் முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ளும் ஹைடெக் பார்ட்டிஸூக்கு போதை பொருள்கள் சப்ளை செய்து வந்த பிரதீக் ஷெட்டி என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை சிசிபி காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு பல பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி மனோவியல் மருந்துகள் அல்லது எக்ஸ்டஸி டேப்லெட்டுகள் அல்லது எல்.எஸ்.டி கீற்றுகள் போன்ற போதை பொருள்கள் டார்க் வேப் மூலமாக விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து ஹைடெக் கடத்தல்காரரிடம் சிசிபி விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
அதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில், மங்களூருவைச் சேர்ந்த பிரதீக் ஷெட்டி(30), ஐடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி பருவத்தில் போதை பொருளுக்கு அடிமையான ஷெட்டியால், நாளடைவில் அடிமையாக தொடங்கி போதை பொருளை மற்றவர்களுக்கு சப்ளை செய்யவும் தொடங்கினார். இதன் காரணமாக தனது வேலையை இழந்த ஷெட்டி, இறுதியில் முழு நேர போதை பொருள் வாங்கி விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக, ஷெட்டி சிசிபி காவல் துறையால் கடந்த 2018இல் போதை பொருள் சப்ளைகளுடன் இணைந்து கைது செய்யப்பட்டார். அச்சமயத்தில் ஒன்றரை கிலோ கோகோயின் மற்றும் சுமார் 1.48 கோடி மதிப்புள்ள 1930 எக்ஸ்டஸி மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது. ஷெட்டிக்கு நைஜீரியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலிடமும் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.