தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்! - கன்னட சினிமா பிரபலங்கள்

பெங்களூரு : தடை செய்யப்பட்ட போதைப்பொருளை கன்னட திரை பிரபலங்கள், விவிஐபிக்களுக்கு விற்பனை செய்த மாஃபியாவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் (சிசிபி) கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சியான தகவல்!
போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சியான தகவல்!

By

Published : Sep 10, 2020, 7:09 PM IST

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் பெங்களூரு போதைப் பொருள் மாஃபியா விவகாரத்தில் கன்னட திரை உலகினர், கர்நாடக முக்கிய பிரமுகர்கள் பலர் ஈடுபட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட உயர் போதைப்பொருள்களை பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து இந்த போதைப்பொருள்கள் இறக்குமதி செய்து, கர்நாடகாவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் வணிகர்கள், நடிகர்கள், பாடகர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள், அரசியல் தலைவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரு போதைப் பொருள் மாஃபியாவைச் சேர்ந்த வீரேன் கண்ணா, ரவிசங்கர், பெப்பர் சம்பா, ராகுல் டோன்ஸ், நியாஸ் அகமது, ப்ரீத்வி ஷெட்ட ஆகியோரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) கைது செய்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 4ஆவது குற்றவாளியாக கருதப்படும் பிரசாந்த் ரங்காவை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரபலங்களுக்கு போதைப்பொருள் சம்பளை செய்த ரங்காவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் இந்த சட்டவிரோத குற்ற வர்த்தகத்தில் ஈடுபட்ட மேலும் பலர் சிக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன. இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த 15 நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையின் தலைவர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, பெல்ஜியத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் இன்று (செப்டம்பர் 10) சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details