ஒடிசாவில் புவனேஷ்வரைச் சேர்ந்த மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணலை உபயோகித்து பல்வேறு கருத்துகளைக் கூறிவருவார்.
அந்த வகையில், பூரி பகுதியின் கடற்கரை மணலில் செதுக்கப்பட்டுள்ள அவரின் புதிய கைவண்ணத்திற்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன். அதில், ஹோலி பண்டிகைக்கு வாழ்த்துகளையும், கொரோனா வைரஸிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்