இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் தோனியின் இரண்டாவது இன்னிங்ஸிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனைகளுக்காக ரசிகர்கள் #ThankyouDhoni என்ற ஹேஷ்டேக்கில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.