உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும், வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சாம்சங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ‘ஹேண்ட் வாஷ் ஆப்’ என்ற புதிய வசதியைக் கொண்ட ஸ்மார்ட் கேலக்ஸி கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கைக்கடிகாரத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் பயனர்களுக்கு அவ்வப்போது கை கழுவுதல் பற்றி நினைவூட்டுகிறது.