கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இரண்டரை மாதம் கழித்து தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் - தமிழ் செய்திகள்
டெல்லி: கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனையில் இருந்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குணமடைந்து வீடு திரும்பினார்.

Sambit Patra
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அனைவருடைய ஆசீர்வாதங்களுடனும் நான் குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். நான் முழுமையாக குணமடைய இன்னும் சிறிது காலம் ஆகும்.
மேலும், இக்காலக்கட்டத்தில் தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து பாஜக தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி. நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஒரு தாயைப் போல் கட்சி கவலைப்பட்டது” என தெரிவித்துள்ளார்.