உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி, தனது உறவுக்காரப் பெண்ணை இளைஞர்கள் சிலர் தொடர்ந்து கேலி செய்துவருவதாகச் சில நாள்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை: குடும்பத்திற்கு சமாஜ்வாதி ரூ.2 லட்சம் நிதியுதவி! - சமாஜ்வாடி கட்சி
லக்னோ: பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி குடும்பத்திற்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், தனது மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விக்ரம் ஜோஷியை தடுத்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி குடும்பத்திற்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், "இளைஞர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரின் குடும்பத்திற்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.