நாடு முழுவதும் கரோனா பரவாமல், தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் ஊரடங்கில் நிறுத்தப்பட்டிருந்த பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயில் வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், லட்டு விற்பனை மீண்டும் நேற்று தொடங்கியுள்ளது.
ஆந்திராவில் உள்ள தேவஸ்தான மண்டபங்கள், விற்பனை நிலையங்களில் நேற்று காலை முதல் லட்டு விற்பனை தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பெற விரும்பும் பக்தர்கள், அதில் பதிவு செய்து விட்டு அருகில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் லட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருமலை - திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் தொடங்கியதால், பக்தர்கள் அதிக அளவு ஆன்லைனில் பதிவு செய்து, லட்டை வாங்கிச்செல்கின்றனர்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தற்போதுள்ள மாவட்டதிலேயே தேர்வு