இமாச்சல் மாநிலம் ரோஹ்தாங்கில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.3) திறந்துவைத்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சுரங்கப் பாதை உருவாக்க ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் செயில்(SAIL) நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்த சுரங்கப் பாதை உருவாக சுமார் 15 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட உருக்கு(இரும்பு) தேவைப்பட்ட நிலையில் அதில் சுமார் 9 ஆயிரம் டன் உருக்கை செயில் நிறுவனம் வழங்கியுள்ளது. செயில் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டை மத்திய உருக்குத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டியுள்ளார்.