இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகளின் மூலம் பாதுகாப்பான தண்ணீரை வழங்கி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் படும் துயரம் முடிவுக்கு வரும்.
வீட்டுக் குழாய் இணைப்புகள் எண்ணிக்கையின் அடிப்படையிலும், மத்திய, மாநில பங்களிப்பில் இருந்து பயன்படுத்தப்பட்ட நிதியின் அடிப்படையிலும் இந்திய அரசு நிதியை வழங்கும். குழாய் இணைப்புகளைக் கொடுப்பதற்காக 373 கோடியே 87 லட்சத்து ரூபாய் தமிழ்நாட்டிற்கு 2019-20ஆம் ஆண்டில் வழங்கப்படும்.
தற்போது வரை 373 கோடியே 10 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மார்ச் மாத இறுதியில், 114 கோடியே 58 லடசம் ரூபாய் மட்டுமே ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலத்தால் பயன்படுத்த முடிந்தது.
குறிப்பாக, 917 கோடியே 44 லட்சம் ரூபாய் 2020-21ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எஞ்சியுள்ள 264 கோடியே 9 லட்சம் ரூபாயைச் சேர்த்து, ஆயிரத்து 181 கோடியே 53 லட்சம் ரூபாய் உறுதிப்படுத்தப்பட்ட மத்திய அரசின் நிதி தமிழ்நாட்டிடம் இருக்கிறது.
இதன்மூலம் நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடன் வாங்கும் அளவு 3.5 விழுக்காட்டிலிருந்து, 5 விழுக்காடாக மத்திய நிதியுடன் சேர்த்து, அதற்கு இணையான மாநிலத்தின் பங்குத் திட்டத்தை சரியான தருணத்தில் வழங்கப்படும். எனவே, மாநிலத்தின் பங்குத் தொகையும் சேர்த்து, குழாய் இணைப்புகள் வழங்குவதற்கு 2020-21ஆம் ஆண்டில் மாநிலத்திடம் மொத்த நிதியாக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் இருக்க வேண்டும்.
இதனைக் கொண்டு, 13 கோடியே 86 லட்சம் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை ஒப்பிட்டால், குறைவான வீடுகளுக்கே 2019-20ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.