காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய சிங் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக பலமான வேட்பாளரை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மேல்காவுன் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாகூரை பாஜக இத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.
திக் விஜய சிங்கிற்கு எதிராக போட்டியிடும் சாத்வி பிரக்யா - சாத்வி பிரக்யா தாகூர்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய சிங்கை எதிர்த்து சாத்வி பிரக்யா தாகூர் களமிறங்குவார் என பாஜக அறிவித்துள்ளது.
தற்போது பிணையில் இருக்கும் சாத்வி இதுகுறித்து கருத்து தெரிவிக்க செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துள்ளேன், நிச்சயம் வெற்றி பெறுவேன், இந்த போட்டி எனக்கு கடுமையானது அல்ல" என்றார்.
முன்னதாக அவர் மூத்த பாஜக தலைவர்களான சிவராஜ் சிங் சவுகான், ராம்லால் ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றதாக கூறப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள மேல்காவுனில் இருசக்கர வாகனத்தில் இருந்த குண்டு வெடித்து ஏழு பேர் உயிழந்தனர். 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்டு சிறிது காலம் சாத்வி பிரக்யா சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.