மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு மாவட்டத்தில் அமைந்துள்ள நக்தனா மடத்தில், பால் தபஸ்வீ ருத்ரா பசுபதிநாத் என்ற சாது கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார். தவலறிந்து சம்பவம் இடத்திற்கு காவல்துறையினர் சென்று பார்க்கையில், சாதுவுடன் சேர்த்து மற்றொருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த மடத்தில் சில பொருள்கள் திருடு போயிருப்பது கண்டறியப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டதால், கொலையாளி அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் கொலையாளியை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், தெலங்கானா - மகாராஷ்டிரா எல்லைப் பகுதியான தனூர் பகுதியில், சந்தேகிக்கும்படி ஒருவர் கையில் கோடாரியுடன் சுற்றித்திரிவாதாக பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். அவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் சாய்நாத் லிங்கேட் என்பதும், நேற்று இரவு நக்தனா மடத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டபோது சாதுவை கொலை செய்ததும் தெரியவந்தது.