தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்தனா மடத்தில் இரட்டை கொலை - தேடுதல் வேட்டையில் காவலர்கள் - சாது ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு மாவட்டத்தில் உள்ள மடத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சாது
கொல்லப்பட்ட சாது

By

Published : May 24, 2020, 11:19 AM IST

Updated : May 24, 2020, 11:47 AM IST

மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடு மாவட்டத்தில் அமைந்துள்ள நக்தனா மடத்தில், சாது ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உயிரிழந்தவர் பால் தபஸ்வீ ருத்ரா பசுபதிநாத் என்பதும், அவருடன் சேர்த்து மற்றொருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த மடத்தில் சில பொருள்கள் திருடு போயிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கொலையாளியை தேடும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து இறையாகும் சாதுக்கள்! மீண்டும் கொலை!

இதையும் படிங்க: வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை!

Last Updated : May 24, 2020, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details