தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாதனா ராமச்சந்திரனின் பேச்சு ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மத்தியில் எடுபடுமா? - Supreme Court interlocutor

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றைத் திரும்பப்பெற வேண்டும் என ஷாஹீன் பாக் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நிதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமாதானக் குழுவினர், போராட்டத்தை கைவிடும்மாறு நான்காவதாக நாளாக இன்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Sadhana Ramachandran reaches Shaheen Bagh
Sadhana Ramachandran reaches Shaheen Bagh

By

Published : Feb 23, 2020, 9:33 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என டெல்லியிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்துவரும் சூழலில், நான்காவது நாளாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமாதானக் குழுவினர் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களைச் சந்தித்து பேசினார்.

போராட்டக்காரர்கள் மத்தியில் சாதனா ராமச்சந்திரன் பேசுகையில், ”போராட்டம் நடத்துவது உங்கள் உரிமை என உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அதேபோன்று பிற குடிமக்களுக்கு உள்ள உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சாலையில் பொதுமக்கள் செல்ல மட்டும் வழிவிடாமல் உங்கள் மனக்கதவையும் திறந்திடுங்கள். நாங்கள் அரசுத் தரப்பிலிருந்து பேசவில்லை. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்போம்” என்றாா்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த டிசம்பர் மாதம் பாதியிலிருந்து சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி வரும் நிலையில், இந்தப் போராட்ட வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்களைச் சமாதானம் செய்ய சாதனா ராமச்சந்திரன் கடுமையாகப் போராடிவருகிறார்.

இதையும் படிங்க:இந்தியா பல கலாசாரங்கள், மரபுகளால் உருவான நாடு: எஸ்.ஏ. போப்டே

ABOUT THE AUTHOR

...view details