தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சிரோமணி அகாலி தளம்

சண்டிகர்: வேளாண் உற்பத்தி சந்தை குழு சட்டத்தை நீக்காவிட்டால், முதலமைச்சர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபடுவோம் என சிரோமணி அகாலி தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரோமணி அகாலி தளம்
சிரோமணி அகாலி தளம்

By

Published : Oct 13, 2020, 10:24 AM IST

கடந்த 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.

  • விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்.
  • விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்
  • அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம்.

இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை நீக்காவிட்டால், பஞ்சாப் முதலமைச்சர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபடுவோம் என சிரோமணி அகாலி தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏழு நாள்களுக்குள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி சட்டத்தை நீக்க வேண்டும் என அவர்கள் காலக்கெடு விதித்துள்ளனர். விவசாய சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தை முதன்மையான சந்தை பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details