இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டதன் 45ஆவது ஆண்டு இன்று (ஜூன் 25) அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "45 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக போராடி பெரும் கொடுமைகளை அனுபவித்த தியாக செம்மல்களை நாடு ஒருபோதும் மறவாது. அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.