உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, இந்தப் புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அக்குழு, குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அதனை தள்ளுபடி செய்தது.
'விசாரணை அறிக்கை வேண்டும்' - கோகாய் மீது பாலியல் புகாரளித்த பெண் கோரிக்கை
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் விவகாரத்தில், விசாரணை நகலை அளிக்குமாறு புகாரளித்த முன்னாள் பெண் ஊழியர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கோகாய் மீது புகாரளித்த முன்னாள் பெண் ஊழியர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'எந்த அடிப்படையில் எனது புகார் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள விசாரணை அறிக்கையின் நகலை எனக்கு வழங்க வேண்டும். புகார் அளித்தவர் என்ற அடிப்படையில், விசாரணை அறிக்கையை பார்வையிட எனக்கு உரிமையுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இந்த விசாரணை அறிக்கையின் நகல் அளிக்கப்பட்டால், புகார்தாரரான எனக்கும் அது அளிக்கப்பட வேண்டியது அவசியம்' என குறிப்பிட்டிருந்தார்.