இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்க்கு கரோனா! - சச்சின் பைலட்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
sachin-pilot-tests-positive-for-coronavirus
அத்துடன் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தற்போது தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுவருகிறேன். விரைவில் குணமடைவேன்" எனப் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'விவசாய துறையின் 3 புதிய மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது' - சச்சின் பைலட்