ராஜஸ்தான் மாநிலம் டோங் சட்டப்பேரவை உறுப்பினரான சச்சின் பைலட் நேற்று தனது 43ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பைலட்டின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரத்த தான முகாம்களை நடத்தினர்.
சச்சின் பைலட்டின் பிறந்தநாளிற்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா, பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் பைலட். நீங்கள் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ட்வீட் செய்துள்ளார்.
பிசிசி தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா உள்ளிட்ட பலர் சச்சின் பைலட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பைலட்டின் ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரத்த தான முகாம்களை ஏற்பாடுசெய்தனர்.
ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்ததற்காகவும், பிறந்தநாளில் தன்னை வாழ்த்தியதற்காகவும் கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.