சபரிமலையில் ஆண்டுதோறும் ஆடிமாத பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடிமாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடக்கிறது.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு - சபரிமலை நடை திறப்பு
திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
அதன் முதல் நாளான இன்று மேல்சாந்தி, வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார். இதனைத் தொடர்ந்து 18 படி வழி சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வார்ப்பார். இதற்கு பிறகு பக்தர்கள் படி வழி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீண்டும் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்பு நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்குப் பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.
மேலும், எல்லா நாட்களிலும் மதியம் உச்ச பூஜைக்கு முன்பு களப அபிஷேகம், இரவு 7 மணிக்கு படி பூஜை நடக்கும். 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.