தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலை கோயில் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி - சபரிமலை பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 250 பேர் மட்டுமே அனுமதிக்க கேரள மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை
சபரிமலை

By

Published : Oct 9, 2020, 10:03 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மாதமும் ஐந்து நாட்கள் பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் இன்றி பூஜை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மலையாள மாதமான துலாம் (ஐப்பசி) பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இதில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் பக்தர்கள் பங்கு பெறலாம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்ட மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜையின்போது ஒரே நேரத்தில் கோயிலுக்குள் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வடசெரிக்காரா, எருமெலி வழி தவிர சபரிமலைக்கு செல்லும் மற்ற வழித்தடங்கள் அனைத்தும் மூடப்படும்.

பூஜைக்காக வரும் பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள ஆயுத போலீஸ் (கேஏபி) ஐந்தாவது பட்டாலியன் ராதாகிருஷ்ணன் காவல்துறை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details