தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலை: மாதாந்திர பூஜைக்கு பக்தர்கள் அனுமதி - சபரிமலை மாதாந்திர பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மாதாந்திர  பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pilgrims allowed in Sabarimala
Pilgrims allowed in Sabarimala

By

Published : Oct 10, 2020, 12:18 PM IST

Updated : Oct 10, 2020, 9:37 PM IST

கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும் கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழிபாட்டுத்தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுவருகின்றன.

சபரிமலை: மாதாந்திர பூஜைக்கு பக்தர்கள் அனுமதி

இந்நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை கோயில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிலக்கல் என்ற பகுதியில் தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்களுக்கு மட்டுமே சதரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலுக்கு வரும் காட்டுவழிப் பாதை மூடப்படுவதாகவும் பக்தர்கள் அனைவரும் சாலை மார்க்கமாக மட்டுமே கோயிலுக்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்துகொண்டு காட்டுப்பாதையில் ஏறுவது சிரமமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய ஏதுவாக நிலக்கல் பகுதிக்கு சிறப்பு சுகாதாரக்குழு நியமிக்கப்பட்டுள்ளது..

Last Updated : Oct 10, 2020, 9:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details