தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? - உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

By

Published : Oct 18, 2019, 12:36 PM IST

Updated : Oct 18, 2019, 5:17 PM IST


டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவி ஏற்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் முழுப்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும்.

இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னர் நீண்ட நாட்கள் விசாரணையில் உள்ள அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க:

இயக்குநர் வெற்றிமாறன் மீதான தேச துரோக வழக்கு: யார் இந்த ஏபி சாஹி?

Last Updated : Oct 18, 2019, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details