மார்ச் 30ஆம் தேதிமுதல் மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் வீடில்லாத ஆதரவற்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் தன்னார்வலர்கள் மூலம் புதுச்சேரி அரசு உணவு வழங்கிவருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா வந்த வாடிம் போகஸ்ரோவ் என்பவர் ஊரடங்கு அமல் படுத்திய நிலையில் புதுச்சேரியில் சிக்கிக் கொண்டுள்ளார்.
ரஷ்ய தூதரகத்தின் வேண்டுகோளின்படி அந்நபர் புதுச்சேரி ரயில் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு மார்ச் 23ஆம் தேதிமுதல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தன்னார்வலர்கள் தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கிவருகிறார்கள்.
சுற்றுலா வந்த ரஷ்ய நபரை தங்கவைத்து உணவு வழங்கல்: உருக்கமான நன்றி! இதனிடையே வாடிம் போகஸ்ரோவ், தனக்கு 15 நாள்களுக்கு மேலாக உணவு வழங்கிவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், உணவகங்கள் ஏதுமில்லா இந்தச் சூழலில் மாவட்ட நிர்வாகம் வழங்கும் உணவாலேயே தான் உயிர்வாழ்வதாகக் கூறினார்.
இதையும் படிங்க:கரோனா நிதிக்காக புதுவையில் பெட்ரோல் விலை உயர்வு!