தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகமதாபாத்தில் மக்களுக்குச் சேவையாற்றிவரும் ரஷ்யர் - காரணம் என்ன? - Vaskov Dmitri russian tennis player

அகமதாபாத்: ஷிலாஜ் பகுதியில் பிரமேஷ் மோடிக்குச் சொந்தமான ஏஸ் டென்னிஸ் அகாடமிக்கு விருந்தினராக வந்திருந்த ரஷ்யாவைச் சேர்ந்த வஸ்கோவ் டிமிட்ரி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் மக்களுக்குச் சேவையாற்றி வருகிறார்.

Russian citizen trapped in Ahmedabad is serving people during lockdown
Russian citizen trapped in Ahmedabad is serving people during lockdown

By

Published : May 16, 2020, 4:33 PM IST

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரரான பிரமேஷ் மோடி தனது சொந்த ஊரான அகமதாபாத்தில், ஏஸ் டென்னிஸ் அகாடமியை நடத்திவருகிறார். அந்த அகாடமி மூலம் பல டென்னிஸ் வீரர்களுக்கு அவர் பயிற்சி வழங்கிவருகிறார். இந்த நிலையில், இவரது டென்னிஸ் அகாடமிக்கு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் வஸ்கோவ் டிமிட்ரி விருந்திரனாக வந்திருந்தார்.

இதனிடையே கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் முடங்கியதால் இவர், மார்ச் 27ஆம் தேதி தனது தாயகத்திற்கு புறப்படவிருந்த விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

இதன் விளைவாக இவர் அகமதாபாத்தில் சிக்கித் தவித்தார். இவர் ரஷ்யா செல்ல பிரமேஷ் மோடி தொடர்ந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது. இந்நிலையில், அகமதாபாத்தில் சிக்கித் தவிக்கும் இவர், பிரமேஷ் மோடி அவரது மனைவி அமி மோடி, தன்னார்வு அமைப்பாளர்களுடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சேவையாற்ற முடிவு செய்தார்.

இவர்களது குழு அகமதாபாத்தில் ஒவ்வொரு நாளும் 9,000 உணவு பாக்கெட்டுகளை விநியோகித்து வருகின்றனர். மார்ச் 31ஆம் தேதி முதல் இதுவரை 3.5 லட்சம் உணவு பாக்கெட்டுகளும் 750 ரேஷன் பொருள்களையும் விநியோகித்துள்ளனர். கரோனா வைரசால் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் குஜாராத் மூன்றாம் இடத்தில் உள்ளது. குஜாராத்தில் இதுவரை 9,931 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அகமதாபாத்தில் மட்டும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடும் ட்ரக்கில் குழந்தை பெற்றெடுத்த குடிபெயர்ந்த தொழிலாளி

ABOUT THE AUTHOR

...view details