குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இதனால் வடகிழக்கு டெல்லியிலுள்ள பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று டெல்லி இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, "டெல்லியில் கடந்த வாரம் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் ஏற்பட்டன. சில குறிப்பிட்ட கட்சிகளும் ஊடகங்களும் பரப்பிய வதந்திகளாலேயே டெல்லி கலவரம் ஏற்பட்டது.