டெல்லியில் சர்வதேச நீதிபதிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, இந்தியா பல கலாசாரங்களால் உருவான நாடு என்று கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாட்டின் நீதி அமைப்பு அனைத்து வகை நாகரிகங்களில் உள்ள கலாசார சட்டங்களையும் இந்திய நீதித் துறை ஒருங்கிணைத்துள்ளது. அநேகமாக நவீன அரசியலமைப்புகளின் மிக அடிப்படையான அம்சம் சட்டத்தின் ஆட்சியாகும்.