மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக இந்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்குவங்க மாநிலத்தில் தீவிர போராட்டம் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்தச் சட்டத்தை முன்வைத்து கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியிடம் விசித்திர கேள்வியை முன்வைத்துள்ளார். கேரளாவின் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த ஜோஷ் கலுவெட்டில் என்ற நபர் தகவலறியும் சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை விவரங்களைத் தருமாறு கேட்டுள்ளார்.