தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை! - 40 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

டெல்லி: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்
கரோனா தொற்று

By

Published : Jun 4, 2020, 12:14 AM IST

ஜூன் 3ஆம் தேதி காலை 9 மணி நிலவரப்படி இதுவரை மொத்தம் 41 லட்சத்து 3 ஆயிரத்து 233 பேருக்கு கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக (ஐசிஎம்ஆர்) அலுவலர்கள் தெரிவித்தனர்.

480 அரசு, 208 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 688 ஆய்வகங்கள் மூலம் சோதனை திறன் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்தது. நாட்டில் இரண்டு லட்சத்து ஏழு ஆயிரத்து 615 கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும், மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை 8,909 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நான்கு ஆயிரத்து 776 கரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1,00,303 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என\ தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details