மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசத்திலிருந்து மூன்று மாநிலங்களவை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதில், இரண்டு வேட்பாளர்களை பாஜக சார்பில் களம் காண வைக்கலாம் என அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 20 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து, மத்தியப் பிரதேச மாநிலக் குழு மத்தியத் தேர்தல் பணிக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.
தேசியச் செயலாளர்கள் ராம் மாதவ், கைலாஷ் விஜய்வர்கியா, சத்யாநாராயண ஜட்டியா, பிரபாத் ஜா ஆகியோரின் பெயரில் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இறுதி முடிவை மத்திய தேர்தல் பணிக்குழு தான் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவால் ஒரு வேட்பாளரை மட்டுமே வெற்றிப்பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் கூட, இரண்டு வேட்பாளர்களை களம் காண வைக்கிறது. இதற்குக் காரணம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து கட்சி மாறி வாக்களிக்க வைக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.