தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினர்களாக டிஆர்எஸ் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு - மாநிலங்களவை தேர்தல் 2020

ஹைதராபாத்: மாநிலங்களவை உறுப்பினர்களாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

rs-polls-both-trs-candidates-elected-unopposed-in-telangana
மாநிலங்களவை உறுப்பினர்களாக டிஆர்எஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

By

Published : Mar 19, 2020, 10:48 AM IST

தெலங்கானாவில் கே.வி.பி. ராமச்சந்திர ராவ், கரிக்காப்பட்டி மோகன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்துவந்தனர். இந்தாண்டு ஏப்ரல் 9ஆம் தேதியோடு இவர்களின் பதவிக்காலம் முடிவதால், இந்தப் பதவிகளுக்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த கே. கேசவ ராவ், கே.ஆர். சுரேஷ் ரெட்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் போட்டியின்று மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டிஆர்எஸ் கட்சியில் இணைவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களாக இருந்தனர்.

தெலங்கானா, ஆந்திரா என இருவேறு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு கே. கேசவ ராவ் ஆந்திரா காங்கிரசின் தலைவராக இருந்தவர். கே.ஆர். சுரேஷ் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக பதவிவகித்தவர்.

இதையும் படிங்க:மாநிலங்களவைத் தேர்தல் - போட்டியின்றி தேர்வான திமுக, அதிமுக வேட்பாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details