மாநிலங்களவையில் வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, துணைத் தலைவரிடம் கடுமையாக நடந்துகொண்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதிலும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் தாம் மனஉளைச்சலில் இருந்ததாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தில் அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய கடந்த திங்கள்கிழையன்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஆசுவாசப்படுத்த, ஹரிவன்ஷ் தேனீர், சிற்றுண்டி உள்ளிட்டவைகளை அனுப்பிவைத்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை வாங்க மறுத்ததால், அது அவருக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியதாக கூறிய ஹரிவன்ஷ், தான் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக நேற்று அறிவித்தார். இந்நிலையில், இன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இதையும் பாருங்க:மாநிலங்களவை நிகழ்வுகள் இன்று!