தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச விமான நிலையத்தில் எட்டு கிலோ தங்கம் பறிமுதல்

ஹைதராபாத்(தெலங்கானா): சர்வதேச விமான நிலையத்தில் சுமார் எட்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்க துணை ஆணையர் சிவகிருஷ்ணா தெரிவித்தார்.

shamshabad airport!!
shamshabad airport!!

By

Published : Oct 5, 2020, 10:12 AM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியான ஷம்ஷாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுமார் எட்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 6.62 கோடி ரூபாய் என விமான நிலைய சுங்க துணை ஆணையர் சிவகிருஷ்ணா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த மாதம் 3ஆம் தேதி, சரியான ஆவணங்கள் இல்லாமல் தங்க பிஸ்கட், நகைகளுடன் கூடிய பார்சல் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், சந்தேகம் அடைந்த சுங்க அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பார்சலில் பல்வேறு தங்க நகைகள், வெளிநாட்டு தங்க கம்பிகள், வைரங்கள், விலைமதிப்பற்ற கற்கள், எஃகு கடிகாரங்கள், பிளாட்டினம் டாப்ஸ், பழங்கால நாணயங்கள் அதில் இருப்பது தெரியவந்தது.

எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் பெரிய அளவில் தங்கத்தைக் கொண்டு செல்வது சுங்கச் சட்டம் 1962, மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017ஆகிய விதிகளுக்கு எதிரானவை. இதையடுத்து, தங்க பிஸ்கட் 2.37 கிலோ, நகைகள் 5.63 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை: போராட்டக் களமாகும் மேற்குவங்கம்

ABOUT THE AUTHOR

...view details