தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமர் கோயில் கட்ட இஸ்லாமிய அமைப்பு ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு

திஸ்பூர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ. 5 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

ராமர் கோயில்

By

Published : Nov 9, 2019, 11:37 PM IST

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், அயோத்திலேயே மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ. 5 லட்சம் வழங்குவதாக 21 இஸ்லாமிய சமுதாயங்களைக் கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருகிணைப்பாளரும், அசாம் சிறுபான்மையினர் வளர்ச்சி வாரியத்தின் தலைவருமான மோமினுல் அவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''உச்ச நீதிமன்றம் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகளைத் தகர்த்துள்ளது. அந்தக் கோயிலை கட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படும்'' என்றார்.

மேலும் அசாமில் இருக்கும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்த தீர்ப்பை மதிப்பதாகவும், நாட்டு மக்களும், அசாம் மக்களும் அமைதியை நிலைநாட்டி சமூக வலைதளங்களில் பிரச்னை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளை பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details