தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனையில் ரூ 200 கோடி ஊழல்! - hospital

தெலங்கானா: இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ 200 கோடி முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

மருத்துவமனை

By

Published : Jul 17, 2019, 8:32 PM IST


தெலங்கானா ஊழல் மற்றும் அமலாக்கத் துறை பிரிவினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடத்திய அதிரடி சோதனையில் அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் தேவிகா ராணியும், மருத்துவமனையில் பணிபுரியும் ஐந்து நபர்களும் முறைகேடாக மருந்துகள் எதுவும் வாங்கப்படாமலேயே தனது பினாமிக்கு பணப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.

இதில், மருந்தின் உண்மையான விலையை மறைத்து அதிகப்படியான விலைக்கு வாங்கியதாக கணக்குக் காட்டியுள்ளனர். உதாரணமாக, ரூ 74.20 க்கு விற்கப்படும் லேக்டுலோஸ் சிரப்பினை (Lactulose syrup) ரூ 260க்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details